ராஜீவ் கொலை; தமிழ் நாடு அரசின் விடுதலை மனு ஜனாதிபதி நிராகரிப்பு | தினகரன்

ராஜீவ் கொலை; தமிழ் நாடு அரசின் விடுதலை மனு ஜனாதிபதி நிராகரிப்பு

ராஜீவ் கொலை; தமிழ் நாடு அரசின் விடுதலை மனு ஜனாதிபதி நிராகரிப்பு-Rajiv Gandhi Murderer-President Rejects Tamil Nadu’s Plea to Release Convicts

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள 07 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழ் நாடு அரசின் மனு விக்கக்கோரிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 07 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

ராஜீவ் கொலை; தமிழ் நாடு அரசின் விடுதலை மனு ஜனாதிபதி நிராகரிப்பு-Rajiv Gandhi Murderer-President Rejects Tamil Nadu’s Plea to Release Convicts

கடந்த 1991 மே 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் குறித்த ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு கோரி தமிழக அரசு, இதற்கு முன்னரும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், குறித்த இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர்கள் 07 பேரையும் விடுவிக்குமாறு தெரிவித்து, மீண்டுமொரு முறை தமிழக அரசினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார்.

உள்விவகார அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், அவ்வமைச்சு குறித்த 07 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான கொலைக் குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது என முடிவெடுக்கப்பட்டதாக, உள்விவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


Add new comment

Or log in with...