ராகுலின் இப்தார் விருந்தில் பிரணாப் | தினகரன்

ராகுலின் இப்தார் விருந்தில் பிரணாப்

காங்கிரஸ் ஏற்பாடு செய்த 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2015ல் டில்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின் இரண்டு ஆண்டுகளாக டில்லியில் தேசிய அளவில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இவ்விருந்தில் எதிர்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு இடையே இவ்விருந்தில் பிரணாப் கலந்து கொண்டார். ராகுலுக்கு அருகில் அமர்ந்து அவர் இப்தார் விருந்தில் பங்கேற்றார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் தினேஷ் திரிவேதி, கனிமொழி உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...