Thursday, April 25, 2024
Home » மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்வு

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்வு

by damith
November 20, 2023 10:40 am 0 comment

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.

இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று இறுதி நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வுகள் சனிக்கிழமை மாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல இந்து ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றன.

சரவணப் பொய்கையில் ஆறு திரு முகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (18) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு (18) மாலை சிறப்பாக இடம்பெற்றது. -இது திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மேளதாளம், வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய வளாகத்தில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

(மன்னார் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT