வழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு | தினகரன்


வழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு

வழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு-Appeal Court Extended Interim order to Prevent Gota's Arrest


முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு, குறித்த மனு விசாரணை முடியும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பல முறை நீடிக்கப்பட்ட நிலையில் இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

இன்றைய தினம் (14) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான, பிரீத்தி பத்மன் சுரசேன மற்றம் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமனற்ம் குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.

வீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 


Add new comment

Or log in with...