இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யசோத பண்டார, கடந்த ஜூன் 06 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின்போது, மது போதையில் வாகனம் செலுத்தியமை, அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர், இன்று (14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு இன்று (14) சிலாபம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில், ஆரச்சிக்கட்டு, கோட்டபிட்டிய சந்தியில் வைத்து, சந்தேகநபர் செலுத்திச் சென்ற, அமைச்சுக்குச் சொந்தமான கெப் ரக வாகனம் கடந்த ஜூன் 06 ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளாகி, வீடொன்றில் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு, எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Add new comment