ஆப்கான் அரச கட்டடத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி | தினகரன்

ஆப்கான் அரச கட்டடத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி

ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகர் காபுலில் உள்ள கிராமிய மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஊழியர்கள் ரமலானை ஒட்டி முன்கூட்டியே அலுவலகத்தில் இருந்து வெளியேறி பஸ்ஸிற்காக காத்திருந்தபோது இந்த குண்டு வெடித்துள்ளது.

தலிபான் அமைப்பு ஆப்கான் அரசுடன் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கிய நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த வாரம் நோன்புப் பெருநாளின் மூன்று தினங்களிலுமே யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரவுள்ளது. எனினும் ஐ.எஸ் போன்ற ஏனைய குழுக்களுக்கு எதிராக அரசு தொடர்ந்து படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் உள்ள மாகாண கல்வித் திணைக்கள கட்டடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.


Add new comment

Or log in with...