விபத்தில் கம்பன்பிலவின் மகன்; பார்வையிட வெளிநாடு செல்ல அனுமதி | தினகரன்

விபத்தில் கம்பன்பிலவின் மகன்; பார்வையிட வெளிநாடு செல்ல அனுமதி

விபத்தில் சிக்கிய கம்பன்பிலவின் மகன்; வெளிநாடு செல்ல அனுமதி-Son Accident-Udaya Gammanpila Permitted to Go Abroad-Court

 

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதான செயலாளரான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பிலவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு மாத கால விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள தனது, 10 வயதான மகன், விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை பார்வையிடச் செல்வதற்காக அனுமதி தருமாறு, கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோசடி வருமானம் தொடர்பிலான வழக்கு தொடர்பில் உதய கம்மன்பில எம்பிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்மன்பில எம்.பியின் கோரிக்கைக்கு அமைய, அவரது வெளிநாடு செல்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்குவதாக, இன்றையதினம் (13) கொழும்பு பிரதான நீதவான் ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ அறிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...