கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா | தினகரன்

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா

விசேட  இணைப்பிதழ் உள்ளே...

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் 11ம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்று நேற்று 12ம் திகதி வெஸ்பர்ஸ் ஆராதனையும் 13ம் திகதி திருவிழா திருப்பலியுடன் திருச்சுரூப பவனியும் இடம்பெறவுள்ளன.

வெஸ்பர்ஸ் மாலை ஆராதனை ஜூன் 12ம் திகதி மாலை 7.00 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. 13ம் திகதி திருநாள் சிறப்புத் திருப்பலி தமிழில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயேல் இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையிலும் சிங்கள மொழித் திருவிழா திருப்பலி கொழும்பு துணை ஆயர் பேரருட்திரு மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையிலும் ஆங்கில மொழித் திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்கத் தூதுவர் பேரருட்திரு பியார் வான் டொட் ஆண்டகையின் தலைமையிலும் இடம்பெறவுள்ளன. புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.

வழமையான வீதிகளில் திருப்பவனி இடம்பெறுவதுடன் இறுதி ஆசீர்வாதம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இரவு 8.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. நவநாள் மறையுரைகளை தமிழ் மொழியில் அருட்தந்தை ஜெ. ரமேஸ் அடிகளாரும் சிங்கள மொழியில் அருட்தந்தை என்டன் தினேஸ் அடிகளாரும் வழங்கினர். (ஸ


Add new comment

Or log in with...