அமித் ஷா அடுத்த மாதம் சென்னை வருகை | தினகரன்

அமித் ஷா அடுத்த மாதம் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் அதிக உறுப்பினர்களைப் பெறும் வகையில் எங்களின் பணி இருக்கும். கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த மாதம் பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வர உள்ளார்.

இன்றைய சூழலில் தமிழகத்துக்கு பல வளர்ச்சித் திட்டங்கள் வர வேண்டும். ஆனால் எல்லா வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் தவறான கருத்துகள் முன்னிறுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைக் குறிப்பிடலாம். ரூ.10,000 கோடியில் தமிழகத்துக்கு கிடைக்கும் ஒரு நல்ல திட்டம் அது. இப்போதே அதை எதிர்த்து பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. காடுகள், மக்களின் நிலங்களுக்கு குறைவான பாதிப்பு இருக்கும் வகையில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...