காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது குற்றச்சாட்டுகள் பதிவு | தினகரன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேரில் ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மார்ச் 6ம் திகதி மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பிருப்பதாக பேசினார்.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜேஷ் குண்டே என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த மே 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ராகுல், ஜூன் 12ம் திகதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதனையடுத்து ராகுல் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார். அப்போது அவர் தாம் குற்றமற்றவன் என கூறினார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை ஓகஸ்ட் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், அவர்கள் என் மீது எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறட்டும். அதனை நான் தடுக்க மாட்டேன் என்றார்.


Add new comment

Or log in with...