சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு | தினகரன்

சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு

சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு-Historical Kim-Trump Meeting at Singapore

 

கைகுலுக்கிக் கொண்ட டிரம்ப் - கிம்

பல தசாப்த முறுகலுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் ஈடுபட்டு கைகுலுக்கிக் கொண்டதோடு சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர்.  

சென்டோசா தீவில் இன்று (12) நடைபெறும் உச்சிமாநாட்டில் டிரம்ப் மற்றும் கிம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது புன்னகைத்தபடி கைலாகு கொடுத்தனர். இருவரும் பின்னர் அரை நாள் சந்திப்பில் ஈடுபட்டனர்.  

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் சிறு மேசையில் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்தபோது, 'இங்கு வருவது இலகுவாக இருக்கவில்லை' என்று மொழிபெயர்ப்பாளர் ஊடே டிரம்பிடம் கிம் தெரிவித்தார். 'அது உண்மையே' என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் கிம்முடனான சந்திப்பில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரியா தனது அணு அயுதத்தை கைவிட அமெரிக்க எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடகொரிய தலைவருடன் தான் ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி இதன்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...