கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS | தினகரன்

கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS

 

கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களுடைய கணித அறிவை வலுப்படுத்துவதற்கு உதவியுள்ளதன் மூலமாக மற்றுமொரு சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 10 ஆவது நிகழ்ச்சித்திட்டமானது அண்மையில் மாத்தறையில் நடாத்தப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட க.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். 

க.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் மத்தியில் கணித அறிவைப் பெருக்கும் ஒரு விசேட கல்விச் செயற்திட்டமாக, கல்வியமைச்சின் கணித பாடப் பிரிவுடன் இணைந்து கடந்த ஆண்டில் LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்கள் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

“எமது மாணவர்களின் தகுதி மற்றும் திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். எந்தவொரு தொழிலைப் பொறுத்தவரையிலும், பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்க உதவுகின்ற ஒரு பிரதான பாடமாக கணிதம் காணப்படுகின்றமையால், தொழில் வாழ்வில் வளர்ச்சி காண்பதற்கு அது அத்தியாவசியமாகும்,” என்று கல்வியமைச்சின் செயலாளரான சுனில் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

“முதற்கட்டத்தில் தெற்கு மாகாணத்தில் உள்ள 29 பாடசாலைகளில் இந்நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க நாம் அணுசரனையளித்துள்ளோம். மாணவர்கள் இப்பாடத்தில் ஆழமான அறிவைப் பெற்று, புதிய கணித பிரயோக நுட்பங்களைக் கற்று, அவற்றை வளர்த்துக்கொள்ள இந்த அமர்வுகள் உதவியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.  
இச்செயற்திட்டத்தின் முதற்கட்டத்தில் 3,000 துணை அலகுகளை கல்வியமைச்சிடம் LAUGFS கையளித்துள்ளதுடன், எல்பிட்டிய, அஹங்கம, அம்பலாங்கொட, திக்குபுர, பலப்பிட்டிய, தங்காலை, கொட்டப்பொல, மாத்தறை, அக்குரஸ்ஸ, கம்புருகமுவ ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட கணித பயிற்சி முகாம்களின் போதும் மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.  

 


Add new comment

Or log in with...