காத்தான்குடி முதியவர் கொலை; மூவர் கைது | தினகரன்

காத்தான்குடி முதியவர் கொலை; மூவர் கைது

 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

தீவிர விசாரணையின் போது சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து விரைந்த காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதாகியுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி , கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள தேநீர்க் கடைக்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்கள்.

சூடுபட்ட முதியவர் ஸ்தலத்திலே பலியாகியிருந்தார்.

பழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியானார்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து கடமையில் ஈடுபட்டனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...