Friday, April 19, 2024
Home » புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில்

புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு

“அனைவருக்கும் ஆங்கிலம்” 2030க்குள் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும்

by sachintha
November 17, 2023 7:57 am 0 comment

 

சிங்கள, தமிழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை இருப்பின் உடனடியாக வந்து நாட்டின் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுமாறு தமிழ்,சிங்கள புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழுக்கு அப்பால் மொழி அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற டி.எஸ்.எஸ் நிகழ்வின் போது 2030 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் “அனைவருக்கும் ஆங்கிலம்” நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார்.

அமரர் ஆர்.ஐ.டி. பிரபல கல்வியாளரும் டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தின் ஸ்தாபகருமான அலஸின் 10 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு,

“எனது பாதை” என்ற சுயசரிதை நூலை ஜனாதிபதி வெளியிட்டார். இலங்கையில் கல்வித்துறையை சீர்திருத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆர்.ஐ.டி. “அனைவருக்கும் கல்வி” என்ற அலஸின் நோக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடி காரணமாக மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இழப்பதை ஏற்க முடியாதென்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சொத்துக்களை விற்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை ஜனாதிபதி விக்கிகிரமசிங்க கோடிட்டுக் காட்டினார்.

இந்த முயற்சிக்கு பங்களிக்கும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு அரசு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

மேலும், சிங்களம் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோரை இலங்கைக்குத் திரும்பி புதிய பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்,

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT