காணாமல் போன 08 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு | தினகரன்

காணாமல் போன 08 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு

காணாமல் போன 08 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு-Vavuniya Abducted 8 Month Child Found at Puthukkudiyiruppu

 

குழந்தையை பராமரித்த இரு பெண்கள் கைது

வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் நேற்று முன்தினம் (31) காணாமல் போன 08 மாத ஆண் குழந்தை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைந்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதன்போது, குழந்தையை பராமரித்ததாக தெரிவிக்கப்படும் இரு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர், குழந்தையை தாயிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (31) அதிகாலை 2.00 மணியளவில் வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 08 மாத ஆண் குழந்தையை வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றிருந்தனர்.

இலண்டனிலுள்ள தனது கணவனே கடத்தலை செய்வித்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குழந்தையின் தாய் முறைப்பாடு செய்திருந்ததோடு, குழந்தை கடந்தப்பட்டு சிறிது நேரத்தில் அவர் இலண்டனிலிருந்து தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வவுனியா மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...