Thursday, April 25, 2024
Home » சிட்னி மைதானத்தில் சமரியின் பெயரில் இருக்கை வளாகம்

சிட்னி மைதானத்தில் சமரியின் பெயரில் இருக்கை வளாகம்

by sachintha
November 17, 2023 6:14 am 0 comment

இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்துவின் பெயரில் பிரத்யேக இருக்கை வளாகம் ஒன்று பிரபலமான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது.

சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இதில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, சமரி அதபத்துவை கெளரவப்படுத்தும் நோக்கத்தில் சிட்னி மைதானத்தில் “சமரி பே” என்ற பெயரில் பிரேத்யேக இருக்கை வளாகம் ஒன்றை அமைப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கிரிக்கெட்டில் பல்வகை கலாச்சாரங்களை உட்செலுத்துவதற்கும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் முகமாக சிட்னி தண்டர்ஸ் அணி நிர்வாகம் இந்த ஏற்பாடை செய்துள்ளது.

சிட்னி தண்டர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சமரி அதபத்து இதுவரையில் 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 41.55 என்ற சராசரியில் 374 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதுவரையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எந்தவகை போட்டிகளிலும் விளையாடாத சமரி அதபத்து தன்னுடைய கன்னி போட்டிக்காக சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT