Friday, April 19, 2024
Home » பாக். அணித் தலைவர் பாபர் அஸாம் விலகல்

பாக். அணித் தலைவர் பாபர் அஸாம் விலகல்

by sachintha
November 17, 2023 6:01 am 0 comment

பாகிஸ்தான் அணித் தலைமை பொறுப்பில் இருந்து பாபர் அஸாம் விலகியதை அடுத்து அதன் டி20 அணித் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணித் தலைவராக ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஒருநாள் அணித் தலைவரை பாக். கிரிக்கெட் சபை உடன் நியமிக்கவில்லை.

அணித் தலைமை பெறுப்பில் இருந்து அஸாம் இராஜினாமாவை அறிவித்ததை அடுத்து அவரை டெஸ்ட் அணித் தலைமை பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கும்படி பாக். கிரிக்கெட் சபை கேட்டபோதும் அதனை அவர் மறுத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டியில் சோபிக்கத் தவறியதை அடுத்து பாகிஸ்தான் அணியின் பணிப்பாளர் மிக்கி ஆத்தர் உட்பட ஒட்டுமொத்த பயிற்சியாளர்களும் நீக்கப்பட்டனர். முன்னாள் அணித் தலைவர் மற்றும் சகலதுறை வீரரான மொஹமட் ஹாபிஸ் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பரில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு புதிய பயிற்சியாளர் குழாம் நியமிக்கப்படவுள்ளது.

உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு வெற்றி ஐந்து தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

29 வயதான பாபர் அஸாம் 2019இல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதோடு தொடர்ந்து 2021 இல் டெஸ்ட் அணித் தலைவரானார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT