Thursday, March 28, 2024
Home » புத்தளம் நகரில் டெங்கு மரணம் பதிவு; நகரசபையின் சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் நகரில் டெங்கு மரணம் பதிவு; நகரசபையின் சிவப்பு எச்சரிக்கை

- சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் கோரிக்கை

by Prashahini
November 16, 2023 12:59 pm 0 comment

தற்போதைய சீரற்ற காலநிலையினால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

புத்தளம் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், நகரில் டெங்கு நோய் காரணமாக இன்று (16) குழந்தை ஒன்று மரணித்துள்ள செய்தியை நகரசபை நிர்வாகம் மிகுந்த மனவேதனையுடன் அறியத் தருகிறது.

நகரசபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகரசபை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அவற்றை அழிப்பதுடன் உங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்து உயிராபத்துக்களைத் தவிர்க்குமாறு நகரசபை நிர்வாகம் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறது.

மேலும், டெங்கு பரவும் அபாயகரமான சூழலை வைத்திருப்போருக்கெதிராக நகரசபையினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT