சுமார் இரண்டு மாதங்களின் பின் சனத் நிஷாந்த எம்.பி. விடுதலை | தினகரன்

சுமார் இரண்டு மாதங்களின் பின் சனத் நிஷாந்த எம்.பி. விடுதலை

சுமார் இரண்டு மாதங்களின் பின் சனத் நிஷாந்த எம்.பி. விடுதலை-Sanath Nishantha Released on Bail

 

கூட்டு எதிர்க்கட்சியியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு.வின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்க, சேமிப்பகம் ஒன்றை பார்வையிடச் சென்ற வேளையில் அவரை தாக்கியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மிக கொடூரமாக வற்புறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதான இருவருக்கும் கடந்த வருடம் 2016 ஆண்டு பிணை வழங்கப்பட்டதோடு, 2017 முதல் பிணை விதி முறைகளை மீறியதை அடுத்து, அவர்கள் கடந்த மார்ச் 19 இல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் 12 மணி வரைக்குட்பட்ட காலப் சிலாபம் பொலிசில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு பிணை நிபந்தனையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மேற்கொள்ளாது தவிர்த்து வந்ததாக, சிலாபம் பொலிசாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரது சகோதரரான, ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, கடந்த 24 ஆம் திகதி, இருவருக்கும் எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (31) சனத் நிஷாந்த எம்.பிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரும் இன்று (31) சிலாபம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.பி.சி.எஸ். மொராயஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சனத் நிஷாந்த எம்.பியை ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது சகோதரரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


Add new comment

Or log in with...