10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது | தினகரன்

10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது

10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது-Polish Arrested with 100g Gold Biscuit Worth Rs.6.75 Crore

 

பத்து கிலோ கிராம் எடைகொண்ட ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் துபாயிலிருந்து வந்த போலந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) காலை துபாயிலிருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த EK 650 எனும் விமானத்தில் வந்திறங்கிய குறித்த பயணியிடமிருந்து 100 கிராம் நிறை கொண்ட 100 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

60 வயதான சந்தேகநபர், குறித்த தங்க பிஸ்கட்டுகளை, சந்தேகநபர் தனது வயிற்றில் அணிந்திருந்த பட்டியில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...