தெற்கில் வைரஸ் ஏனைய பகுதிக்கும் பரவும் அபாயம் | தினகரன்

தெற்கில் வைரஸ் ஏனைய பகுதிக்கும் பரவும் அபாயம்

 

தெற்கில் பரவும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையான விளக்கமளித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கராப்பிட்டிய ஆஸ்பத்திரிக் கிளையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் இது பரவினால் தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற டொக்டர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை, நிபுணத்துவ டொக்டர்கள் இன்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமென சங்கத் தலைவர் டொக்டர் ஜனித் லியனகே தெரிவித்தார். 

கராப்பிட்டி ஆஸ்பத்திரியில் மட்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு கட்டில்களே உள்ளன. மேல் மாடியில் மேலும் கட்டில்களைப் போட்டு விரிவுபடுத்தலாம்.

இது விடயமாக அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்த அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்புளுவென்ஸாவினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் நிரம்பி உள்ளனர். இதனால் புற்றுநோய், சிறுநீரக, இருதய நோயாளர்களை இப்பிரிவில் சேர்க்க முடியாதுள்ளது.

நான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே இலங்கையில் உள்ளன. 

கராபிட்டியில் இப்பிரிவில் கடமையாற்ற இரு வைத்திய நிபுணரே உள்ளார். நாடு முழுவதும் பத்துப் பேரே உள்ளனர் என அவர் தெரிவித்தார். (எப்.எம்.)


Add new comment

Or log in with...