ரூபா 29 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் மன்னாரில் கைது | தினகரன்


ரூபா 29 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் மன்னாரில் கைது

ரூபா 29 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் மன்னாரில் கைது-2 Arrested with Rs. 29 lakh Worth 29 kg Kerala Ganja at Mannar

 

ரூபா 29 இலட்சம் பெறுமதியான 24 கிலோ (24.18kg) கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று நள்ளிரவு கடந்து, இன்று (30) 12.45 மணியளவில் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேசாலை ஒளுதுடுவை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ரூபா 29 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் மன்னாரில் கைது-2 Arrested with Rs. 29 lakh Worth 29 kg Kerala Ganja at Mannar

பேசாலை, திருதேப்பு பகுதியைச் சேர்ந்த 27, 24 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த கஞ்சா பொதியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (30) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...