பிரதமர் யாழ். விஜயம்; பல நிகழ்வுகளில் பங்கேற்பு | தினகரன்

பிரதமர் யாழ். விஜயம்; பல நிகழ்வுகளில் பங்கேற்பு

பிரதமர் யாழ். விஜயம்; பல நிகழ்வுகளில் பங்கேற்பு-PM-Rani-at-Jaffna

 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

நேற்றுக்  காலை யாழ்ப்பாண த்தை வந்தடைந்த அவர் இன்று பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.  

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வடக்கை மையமாகக் கொண்டு மீள்குடியேற்றம்,வீடமைப்பு, காணி விடுவிப்பு, தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதியளித்தல், அடங்கலான பல அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. பிரதமரின் வடக்கு விஜயத்தின் போது அவற்றின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்த இருப்பதோடு அவற்றின் குறைபாடுகள் பற்றியும் மீளாய்வு செய்ய இருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.  

பிரதமரின் வடக்கு விஜயத்தின் போது அவர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மீளாய்வு கூட்டங்களில் பங்கேற்க இருப்பதோடு இதில் அமைச்சர்கள், எம்.பிக்கள்,மாகாண முதலமைச்சர் ,மாகாண அமைச்சர்கள், திறைசேரி அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர்.(பா) 

 


Add new comment

Or log in with...