20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை | தினகரன்

20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை

20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை-refusing 20th amendment is not fair

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வகையில் ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை எவரும் எதிர்ப்பதற்கான நியாயப்பாடு இல்லை.

இருந்தாலும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் இருப்பதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.  

20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு தாம் ஆதரவாக இருக்கின்ற போதும், புதிய அரசியலமைப்பை தயாரிக்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐக்கிய இடதுசாரி முன்னணியும் லங்கா சமசமாஜ கட்சியும் இருப்பதாக அவர் கூறினார்.  

புதிய அரசியலமைப்பு சாத்தியமாகாத சூழல் இருப்பதாக ஜே.வி.பி தேவையானால் இருபதாவது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இவ்வாறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் வாக்குறுதியளித்தாலும் எவரும் அதனை நிறைவேற்றவில்லை என்றார். 

20 ஆவது திருத்தம் தொடர்பான தனிநபர் சட்ட மூலம் கடந்த வெ ள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதேவேளை குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சின் அறிக்கையை பெற்று நீண்ட செயற்பாடுகளின் பின்னரே விவாதத்திற்கு எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. (பா)

(நமது நிருபர்)

 


Add new comment

Or log in with...