ஜெயலலிதாவாக நடிப்பாரா அனுஷ்கா? | தினகரன்

ஜெயலலிதாவாக நடிப்பாரா அனுஷ்கா?

ஜெயலலிதாவாக நடிப்பாரா அனுஷ்கா?


இப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சினிமாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளிலும் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக யாரை நடிக்க வைப்பது என்பதற்கு தீவிர பரிசீலனை ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் சிறுவயது படங்களை வைத்துக்கொண்டு அவர் ஜாடையில் இருக்கும் திறமையான நடிகைகளை தொடர்புகொண்டு வருகிறார்கள். அவ்வகையில் ஜெயலலிதாவாக நடிப்பதற்கு அனுஷ்கா தான் பொருத்தமானவர் என்று கருதுகிறார்களாம். அனுஷ்கா தரப்பில் இன்னமும் க்ரீன் சிக்னல் விழவில்லை.

இது முழுக்க சினிமாப் படமாக இல்லாமல் bio-feature என்று சொல்லக்கூடிய வகையில் ஆவணத் தன்மையுடன் இருக்குமாம்.

 


Add new comment

Or log in with...