கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு | தினகரன்

கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு

 

முள்ளிவாய்க்காலில் உயிரி ழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணி நீக்கப்பட்ட விவகாரம் நேற்று பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட்ட வங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல தனியார் வங்கியை வடக்கு, கிழக்கிலிருந்து தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

அதேநேரம், வாள் ஏந்திய சிங்கத்திலிருந்து குருதி வடிய, அதன் கீழ் ஒரு தாயும் மகளும் இறந்து கிடக்கும் உருவப்படத்துக்கு முன்னால் வங்கி ஊழியர்கள் அஞ்சலி செலுத்துவது இனவாதத்தைத் தூண்டும் வகையிலானது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த விவகாரத்தை முதலில் சபையில் கூறினார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள் என்பதற்காக கிளிநொச்சியிலுள்ள பிரபல தனியார் வங்கியொன்றின் உதவி முகாமையாளரும், ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லையா? வடக்கு முதல்வரும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்தது தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தினர்.

இதேபோல அஞ்சலி செலுத்திய தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும், ஊழியரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பு கொழும்பிலுள்ள தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ளது? அப்படியானதொரு வங்கி வடக்கு, கிழக்கு தமிழர்களுக்குத் தேவையில்லை.

அதனை அங்கிருந்து அகற்றிவிடுங்கள். உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர்விடுகின்ற உரிமை இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுகளை மூடிவிடுங்கள். சிங்கள, பௌத்தபேரினவாத கண்ணோட்டத்துடனேயே குறித்த வங்கி செயற்பட்டுள்ளது. இதனை வன்மையாகக்கண்டிக்கின்றேன். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவேண்டும் எனக் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத் 

 

 


Add new comment

Or log in with...