கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் ரமேஷ்குமார் ஏகமனதாக தெரிவு | தினகரன்

கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் ரமேஷ்குமார் ஏகமனதாக தெரிவு

 

கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

நேற்று பகல் 12 மணிக்கு கர்நாடகா சட்டசபை கூடியது. அப்போது முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கடைசி நேரத்தில் பாஜகவின் சுரேஷ்குமார் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் பெயரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். துணை முதல்வர் பரமேஸ்வரா இதை வழிமொழிந்தார்.

பின்னர் சபாநாயகரை தெரிவு செய்ய குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதையடுத்து ரமேஷ்குமார் ஏகமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் ரமேஷ்குமார் அமரவைக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...