Friday, March 29, 2024
Home » விராட் கோலி: அதிக சதம் அடித்த வீரராக தனது பெயரை பதிவு செய்தார்

விராட் கோலி: அதிக சதம் அடித்த வீரராக தனது பெயரை பதிவு செய்தார்

- உலகக் கிண்ணத் தொடரில் 711 ஓட்டங்கள் பெற்று மற்றுமொரு சாதனை

by Rizwan Segu Mohideen
November 15, 2023 5:57 pm 0 comment

– இந்திய அணி 397/4; ஷ்ரேயாஸ் ஐயர் 105

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை (100) பெற்ற வீரர் என்ற சாதனையை 35 வயதான விராட் கோலி தனதாக்கியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியிலேயே அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் இடம்பெற்று வரும் குறித்த போட்டியில், விராட் கோலி 117 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் பெற்றிருந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது.

உலகக் கிண்ணத் தொடரில் அச்சாதனையை சம்ன செய்திருந்த விராட் கோலி, தற்போது இப்போட்டியில் மற்றுமொரு சதத்தை பெற்றதன் மூலம் 50 சதங்கள் பெற்று உலகில் அதிக சர்வதேச ஒருநாள் சதத்தை பெற்ற வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த சச்சினின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2003 உலக் கிண்ணத் தொடரில் 673 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனையைப் பதிவு செய்திருந்தார்.

தற்போது இடம்பெறும் உலகக் கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியின் அடிப்படையில் விராட் கோலி 711 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Top Run Scorers
Virat Kohli
Virat Kohli

IND, rhb

711

Innings: 10Average: 101.57
Quinton de Kock
Quinton de Kock

SA, lhb

591

Innings: 9Average: 65.66
Rachin Ravindra
Rachin Ravindra

NZ, lhb

565

Innings: 9Average: 70.62

அதற்கமைய, இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 117 (113), ஷ்ரேயாஸ் ஐயர் 105, சுப்மன் கில் 80 (66) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் ரிம் சௌதி 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

India  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c Williamson b Southee 47 29 40 4 4 162.06
not out 80 66 116 8 3 121.21
c Conway b Southee 117 113 149 9 2 103.53
c Mitchell b Boult 105 70 114 4 8 150.00
not out 39 20 29 5 2 195.00
c Phillips b Southee 1 2 2 0 0 50.00
Extras (b 1, lb 1, w 6) 8
TOTAL 50 Ov (RR: 7.94) 397/4

Yet to bat: 

Fall of wickets: 1-71 (Rohit Sharma, 8.2 ov), 1-164 (22.4 ov), 2-327 (Virat Kohli, 43.6 ov), 3-381 (Shreyas Iyer, 48.5 ov), 4-382 (Suryakumar Yadav, 49.1 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
10 0 86 1 8.60 26 9 4 2 0
10 0 100 3 10.00 20 8 6 1 0
10 1 51 0 5.10 29 3 2 0 0
8 0 65 0 8.12 15 7 1 1 0
7 0 60 0 8.57 13 2 4 2 0
5 0 33 0 6.60 11 1 2 0 0

New Zealand Team: 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT