நஜிபின் பணத்தை 12 மணிநேரம் எண்ணிய அதிகாரிகள் | தினகரன்

நஜிபின் பணத்தை 12 மணிநேரம் எண்ணிய அதிகாரிகள்

 

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொடர்புடைய இடங்களிலிருந்து 110 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு 200 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அது பற்றிய தகவலை ‘தி சன் டெய்லி’ நாளேடு வெளியிட்டுள்ளது. பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தைக் அதிகாரிகள்் சுமார் 12 மணி நேரம் எண்ணினர். மொத்தத் தொகை 15 பெட்டிகளில் மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நஜிப் நேற்று இரண்டாவது முறையாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார். 


Add new comment

Or log in with...