அமெரிக்க துணை ஜனாதிபதியை ‘முட்டாள்’ என்கிறது வட கொரியா | தினகரன்

அமெரிக்க துணை ஜனாதிபதியை ‘முட்டாள்’ என்கிறது வட கொரியா

 

வட கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்துவது இனி அமெரிக்காவைப் பொறுத்தது என்று வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக கெஞ்சப்போவதில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், வடகொரியாவும் அடுத்த மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைச் சந்திப்பு குறித்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் எச்சரிக்கைகள், அவரது அறியாமையையும், முட்டாள்தனத்தையும் காட்டுவதாக வட கொரியா சாடியுள்ளது.

உச்சநிலைச் சந்திப்பு ரத்தாகலாம் என்ற மிரட்டலைப் புதுப்பிக்கும் வண்ணம் அது அமைந்திருந்தது.

வட கொரியாவின் அணுவாயுதக் களைவு குறித்தும், அமெரிக்க வட கொரிய உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அதில் கலந்துரையாடப்படும் என்று நம்பப்பட்டது.

அண்மைய வாரங்களாக இருதரப்பும் அந்தச் சந்திப்பை ரத்துசெய்யலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியிருந்தன.

சென்ற திங்கட்கிழமை பென்ஸ், அமெரிக்க ஜனாதிபதியிடம் விளையாட்டுத்தனமாக நடந்துகொள்வது மிகப் பெரிய தவறு என்று வட கொரிய தலைவரை எச்சரித்தார்.

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி போன்ற நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சொன் ஹுயி பென்ஸைச் சாடியதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. 


Add new comment

Or log in with...