சீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு | தினகரன்

சீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு

 

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளம், மின்னல், மண்சரிவு, நீரில் மூழ்குதல் ஆகியவை காரணமாக இது வரை 10 பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இவ்வனர்த்த நிலைமை காரணமாக,

  • 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
  • 07 பேர் காயமடைந்துள்ளனர்.
  • 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
  • 29 வீடுகள் முழுமையாகவும், 2,527 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன
  • 12 சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
  • 169 அடிப்படைக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த அனர்த்தம் தொடர்பில்,

  • 194 பாதுகாப்பான அமைவிடங்களில் 7,526 குடும்பங்களைச் சேர்ந்த 27,621 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தோர்

மரணமடைந்தோர் மாவட்ட ரீதியாக
கேகாலை - 03
பொலன்னறுவை - 02
காலி - 01
களுத்துறை - 01
புத்தளம் - 01
மொணராகலை - 01
கொழும்பு - 01

சீரற்ற காலைநிலை ⛈️: 8 பேர் மரணம்; 9,817 குடும்பங்களின் 38,046 பேர் பாதிப்பு-DMC Situation Report-23.05.2018-1000hr

➡️ முழு அறிக்கை 

 

PDF File: 

Add new comment

Or log in with...