ஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு | தினகரன்

ஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு

ஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு-JVP-Handed-over-Their-Changes-for-20th-Amendment including Abolishing President's Executive Power

 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி (JVP) கையளித்துள்ளது.

இன்று (25) சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரிடம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவினால் குறித்த யோசனைகள் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு காலம் தாழ்த்த வேண்டிய தேவை இல்லை எனின், இரண்டு அல்லது மூன்று மாத காலத்தினுள் அதனை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக் உள்ளது என்றார்.

 

Add new comment

Or log in with...