பேஸ்புக் நிறுவனர் ஐரோ. பாராளுமன்றில் மன்னிப்பு | தினகரன்

பேஸ்புக் நிறுவனர் ஐரோ. பாராளுமன்றில் மன்னிப்பு

 

பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பர்க் தகவல் ஊடுருவல் சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், பொய்த் தகவல்களை முறியடிக்க தவறியதற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இருப்பினும், அவருடைய மன்னிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தவில்லை.

உள்நாட்டுத் தேர்தல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தம் நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்றும் மார்க் சுக்கர்பர்க் கூறினார்.

பிரிட்டனின் அரசியல் ஆலோசனை நிறுவனம் கம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தகவல் ஊடுருவல் பற்றி, கடந்த மாதம் அமெரிக்க செனட் சபையில் அவர் சாட்சியம் அளித்தார்.

அந்த மோசடி தொடர்பில் மன்னிப்பு கோர மார்க் சுக்கர்பர்க் ப்ரஸ்ஸல்ஸுக்குச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று பாரிஸ் பயணித்தார். 


Add new comment

Or log in with...