ரொஹிங்கிய போராளிகளால் ஹிந்து மக்கள் படுகொலை | தினகரன்

ரொஹிங்கிய போராளிகளால் ஹிந்து மக்கள் படுகொலை

 

மியன்மாரில் கடந்த ஓகஸ்டில் இடம்பெற்ற தாக்குதல்களின்போது ரொஹிங்கிய முஸ்லிம் போராளிகளால் ஹிந்து பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாத்தியம் கொண்ட ஒன்று அல்லது இரண்டு படுகொலை சம்பவங்களில் அர்சா என்று அழைக்கப்படும் அந்தக் குழுவால் 99 ஹிந்து பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதாக உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்புபட்டதான குற்றச்சாட்டை அர்சா மறுத்துள்ளது.

மியன்மார் இராணுவம் வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் ஆரம்ப தினங்களிலேயே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. மியன்மார் இராணுவம் மீது அட்டூழியங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

இந்த வன்முறைகளால் கடந்த ஓகஸ்ட் தொடக்கம் கிட்டத்தட்ட 700,000 ரொஹிங்கியர்கள் மற்றும் ஏனையவர்கள் வெளியேறினர். இந்த மோதல்கள் காரணமாக பெரும்பான்மை பெளத்தர்கள் மற்றும் ஹிந்து சிறுபான்மையினரும் வெளியேற்றப்பட்டனர்.

பங்களாதேஷில் உள்ள அகதிகள் மற்றும் வன்முறை இடம்பெற்ற ரகின் மாநிலத்தில் இருந்து பெற்ற வாக்குமூலங்கள் மூலமே வடக்கு மவுங்டோ நகரப்பகுதியை ஒட்டி இருக்கும் சிறு கிராமங்களில் அர்சான் குழு இந்த படுகொலைகளில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது. 


Add new comment

Or log in with...