சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம் | தினகரன்

சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்

சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்-Lighning-Fire Erupted at Jaffna Chavakacheri School Computer Unit

 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கம் காரணமாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று (23) நண்பகல் ஏற்பட்ட குறித்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கணணி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் மின்னல் தாக்கியதில் சிறியளவான தீப்பிடித்த நிலையில் தீ அணைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்-Lighning-Fire Erupted at Jaffna Chavakacheri School Computer Unit

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டதோடு, இலங்கை மின்சார சபையினரின் உதவியுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தையடுத்து, கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து காணப்பட்டதாகவும், வழமையான கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தை அடுத்து, தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம்  குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 


Add new comment

Or log in with...