புத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்! | தினகரன்

புத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்!

புத்தளம் - பொத்துவில் கடலில் காற்றும் மழையும்-Weather Forecast-Rain & Wind Around Sea area of SL

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள கடலில், கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள கடலில் காணப்படும் செயற்பாடுமிக்க முகில் தொகுதிகள் காரணமாக, காலியிலிருந்து கொழும்பு, மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்கரையை அண்டிய கடல் பிரதேசத்தில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் உடனடியாக, மணிக்கு 70 - 80 கிலோமீற்றராக அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதால், குறித்த கடல் பிரதேசம் உடனடியாக கொந்தளிப்பாக மாறும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 - 70 வரை அதிகரிக்க வாய்ப்பு காணப்படுவதால், அவ்வேளையில் கடல் கொந்தளிப்பாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், மற்றும் கடல் தொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...