விபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள் | தினகரன்


விபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்

விபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்-Accident-at-Kirankulam-Driver-Beaten-by-Residents

 

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (22) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்தவரே படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்-Accident-at-Kirankulam-Driver-Beaten-by-Residents

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி இந்த விபத்தினை ஏற்படுத்தியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளை மோதிய பஸ், நீண்ட தூரம் சைக்கிளை இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தினை தொடர்ந்து பஸ் சாரதி, வேறு ஒரு பஸ்ஸில் ஏறி தப்பிச்செல்ல முயன்றபோது பொதுமக்கள் பஸ் சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதன் காரணமாக அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...