செலான் வங்கி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக Colombo Motor Showஇன் உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக இணைகின்றது. Colombo Motor Show 2023, நவம்பர் 17 முதல் 19 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதோடு வாகனப் பிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது ஒரு உற்சாகமான அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக இணையும் செலான் வங்கி, பங்கேற்பாளர்களுக்கு பரந்த வங்கிச் சேவைகளை வழங்கவுள்ளது. இதில் சிறப்பு வட்டி விகிதங்களுடனான லீசிங் வசதிகள், கடனட்டைகள்,
மேலதிக நன்மைகளுடன் கூடிய நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் என்பன அடங்கும்.