சிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது | தினகரன்

சிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது

 

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், தலைநகர் டமஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.

ஒரு காலத்தில் ஒன்றரை இலட்சம் பலஸ்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர் அல் அஸ்வத்தையும் கைப்பற்றியதாக தேசிய தொலைக்காட்சி மற்றும் சிரிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வெளியேறும் ஒப்பந்தத்தின்படி, ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சிரியாவின் கிழக்கு பகுதிக்கு பஸ் வண்டிகள் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“டமஸ்கஸும் அதன் சுற்றி உள்ள பகுதிகளும் முழுமையான பாதுகாப்பில் உள்ளது” என்று செய்தி தொடர்பாளர் ஜென் அலி மயூப் சிரிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

சிரிய யுத்தத்தில் அரச எதிர்ப்பாளர்களை தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியேற்றும் ஈரான் மற்றும் ரஷ்யா ஆதரவிலான பேச்சுவார்த்தைகள் பொது அம்சமாக மாறியுள்ளது. இவ்வாறு சிரிய அரச படை நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ளது. 


Add new comment

Or log in with...