வெலிக்கடை படுகொலை; பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

வெலிக்கடை படுகொலை; பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வெலிக்கடை படுகொலை; பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு-Welikada-Prison-riots-Emil Ranjan Lamahewa-iyomal rangajeewa-Further Remanded Till May 08

 

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் மே 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் முறையே மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலையில் சட்டவிரோத ஆயுதங்களை தேடும் பணியின்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, கைதிகள் திடீரென ஆயுத களஞ்சியத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன் போதான பதில் தாக்குதலில் 27 கைதிகள் கொல்லப்பட்தோடு 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...