அரசிலிருந்து சு.க வெளியேறுவதை மத்திய குழு முடிவெடுக்கும் | தினகரன்


அரசிலிருந்து சு.க வெளியேறுவதை மத்திய குழு முடிவெடுக்கும்

அரசிலிருந்து சு.க வெளியேறல்; மத்திய குழு முடிவெடுக்கும்-SLFP central committee will decide when to leave from government

 

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர் மஹிந்த அமரவீர மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வது எவ்வாறு என்பதை விடுத்து நாட்டின் நன்மைக்கு முதன்மை அளித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    இங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கட்சி ரீதியாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றும் அவ்வாறு யோசனை முன்வைக்கப்பட்டால் மத்திய குழு அது தொடர்பில் ஆராயும். எவ்வாறெனினும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டே தீர்மானம் எடுக்கப்படும்.  

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றார்.    நாட்டில் சிங்களம் தமிழ், முஸ்லிம்கள் என அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்ற தலைவராகவும் அதேவேளை சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்ற தலைவராகவும் அவரே திகழ்கின்றார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 


Add new comment

Or log in with...