Thursday, March 28, 2024
Home » கடும் மன உளைச்சல் ஏற்படுத்திய மட்டு. சீயோன் தேவாலய விஜயம்

கடும் மன உளைச்சல் ஏற்படுத்திய மட்டு. சீயோன் தேவாலய விஜயம்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை தெரிவிப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:28 am 0 comment

2019, உயிர்த்த ஞயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு சென்றபோது கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். “நான் சீயோன் தேவாலயத்துக்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது.

இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்த்தல், சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புதலில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து தூதுவர் பாராட்டுத் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள், இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள இயேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT