சு.கவின் 16 பேர் - மஹிந்த சந்திப்பு ஒத்திவைப்பு | தினகரன்

சு.கவின் 16 பேர் - மஹிந்த சந்திப்பு ஒத்திவைப்பு

சு.கவின் 16 பேர் - மஹிந்த சந்திப்பு ஒத்திவைப்பு-SLFP 16 member meeting with Mahinda Rajapaksa postponed

 

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சி 16 பேர் கொண்ட குழுவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையிலான சந்திப்பு பின்போடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. 

ஆனால் சில சு.க எம்.பிக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக கொழும்புக்கு வெளியில் உள்ளதால் இந்த சந்திப்பு 23 ஆம் திகதி வரை பின்போடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் பின்னர், தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார அடங்கலான எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தமது குழுவினர், மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர்,எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பல கூட்டங்களை நடத்த எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் இதன் முதலாவது கூட்டம் மாத்தறையில் நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை அதற்கான காரணிகளை உரிய நிபுணர்களைக் கொண்டு பொதுமக்களிடம் விளக்குவதே தமது கூட்டங்களின் நோக்கமெனவும் அவர் தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...