ஆப்கான் விளையாட்டரங்கில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி | தினகரன்

ஆப்கான் விளையாட்டரங்கில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

ஆப்கான் விளையாட்டரங்கில்  குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

 

ஆப்கானிஸ்தான் விளையாட்டரங்கில் நடந்த தாக்குதலில் 8 பேர் பலியானதோடு மேலும் 45 பேர் காயமடைந்தனர். 

கிழக்குப் பகுதி நகரான ஜலாலாபாத்தில் உள்ள அந்த அரங்கில் கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருக்கும் வேளையில், அங்கு தொடர் குண்டு வெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

கடந்த சனிக்கிழமை காலை பார்வையாளர்கள் பகுதியில் குண்டுகள் வெடித்தன. விளையாட்டரங்கில் அப்போது, ரமழான் கிண்ணத்துக்கான போட்டி இடம்பெற்றதாக நங்கார்கார் மாநில ஆளுநர் கூறினார். 

தாக்குலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தலிபான் அமைப்பினர் தாங்கள் அந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தனர். 

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ராப் கானி தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.   
 


Add new comment

Or log in with...