குகுலே கங்கை வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை | தினகரன்

குகுலே கங்கை வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

குகுலே கங்கை வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்மட்ட மக்களுக்கு எச்சரிக்கை-Kukuleganga Spill Gate Open-Kelani River Basin Area Advised

 

குகுலே கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகள் 03 திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, களனி கங்கையின் கிளை ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், களனி கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகள் சார்ந்த தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

களனி, களு, கின், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு, மா ஓயாவின் தாழ் நில பிரதேசத்தில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக, இது வரை ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...