அனர்த்தத்தை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் | தினகரன்

அனர்த்தத்தை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில்

அனர்த்தத்தை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில்-Tri forces ready to serve disaster

 

மோசமான கால நிலையால் ஏற்படும் எத்தகைய அனர்த்தங்களையும் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படகுகள் மற்றும் உபகரணங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.  

இதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் போதிய நிதியினைஅந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேற்படி நிலையம்   தெரிவித்தது. 

குறிப்பாக கடும் பாதிப்புக்குள்ளாகி வரும் காலி மாவட்டத்தில் 25 படகுகள் மற்றும் 10 வள்ளங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 25 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்காக 17 கடற்படைக் குழுக்கள் தயாராகவுள்ளதாகவும் நிலையம் தெரிவித்தது.(ஸ) 

(லோரன்ஸ் செல்வநாயகம்)
 


Add new comment

Or log in with...