அநுருத்த பொல்கம்பொலவுக்கு கிளிநொச்சியில் பிணை | தினகரன்

அநுருத்த பொல்கம்பொலவுக்கு கிளிநொச்சியில் பிணை

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசா மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு புகையிரத பாதை நிர்மாண பணிகளில் ரூபா 8 மில்லியன் நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில் சந்தேகநபர் இன்று (18) காலை கிளிநொச்சி நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர், ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தொடர்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அவருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்ததோடு, அவர் மீண்டும் பிணை விதிகளை மீறினால், அவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...