சீரற்ற காலநிலை; விபத்துகள் பதிவு; வேகக்கட்டுப்பாடு விதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலை; விபத்துகள் பதிவு; வேகக்கட்டுப்பாடு விதிப்பு

சீரற்ற காலநிலை; விபத்துகள் பதிவு; வேகக்கட்டுப்பாடு விதிப்பு-Speed Limit-Expressway-60kmph

அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் எனும் வேகத்தில் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல்வேறு விபத்துகள் பதிவாகியுள்ளதால் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (20) காலை 11.50 மணியளவில் தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொடை மற்றும் களனிகமவிற்கிடையில் ஜீப் வண்டி ஒன்று, அதன் சாரதியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், வீதியில் வழுக்கிச் சென்று, பாதுகாப்பு தடையை மீறிச் சென்று, விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது அதில் பயணித்த குழந்தை ஒன்று உள்ளிட்ட நால்வர் காயத்திற்குள்ளாகி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் குழந்தையும், பெண் ஒருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியில் மேலும் நான்கு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், கட்டுநாயக்கா அதிவேக வீதியில் இரு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர ருவன் குணசேகர தெரிவித்தார்.

எனவே சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்மாறும், முடிந்தளவு வேகத்தை குறைத்துச் செல்லுமாறு பொலிஸ் அத்தியட்சகர ருவன் குணசேகர  அறிவுறுத்தியுள்ளார்.

 


Add new comment

Or log in with...