மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி; இருவர் படுகாயம் | தினகரன்

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி; இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தர் பலி; இருவர் படுகாயம்-Accident at Akkaraipattu-41 Year Old Dead

 

அக்கரைப்பற்றில் சம்பவம்

அக்கரைப்பற்றில் நேற்று சனிக்கிழமை (19) இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு 11.00 மணியளவில் அக்கரைப்பற்று பிரதான விதி நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் 2/3 பொது வீதியில் தெற்கு பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் இரு வீதிகளும் சந்திக்கும் அக்கரைப்பற்று பட்டினபள்ளி வீதி சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தர் பலி; இருவர் படுகாயம்-Accident at Akkaraipattu-41 Year Old Dead

விபத்தில் 2/3 பொது வீதியால் வந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரான அக்ரைப்பற்று 02 ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி வீதியைச்சேர்ந்த 41 வயதுடைய அப்துல் காதர் றிஸ்வி என்பவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தர் பலி; இருவர் படுகாயம்-Accident at Akkaraipattu-41 Year Old Dead

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் இருவரும் படுகாயயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் மேலதிக  சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பின்னால் இருந்து வந்த, அக்கரைப்பற்று 01 ஆம்  குறிச்சியை சேர்ந்த செயினுலாப்தீன் முஹம்மட் ஆசிக் (17) என்பவவரே படுகாயமடைந்து மட்டக்களளப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டவராவார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தர் பலி; இருவர் படுகாயம்-Accident at Akkaraipattu-41 Year Old Dead

சைக்கிளை செலுத்தி வந்தவர் அக்கரைப்பற்று 01 ஆம் குறிச்சி காதிரியா கடற் கரை வீதியைச்சேர்ந்த 18 வயதுடைய சமீம் ஹக்ரம் ஆவார். இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும்  தெரிவித்தனர்.

பொலிசார் இரு மோட்டார் சைக்கிள்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, கொண்டு சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மெற்கொண்டு வருகின்றனர்.

(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன், அம்பாறை சுழற்சி நிருபா் - ரி.கே. ரஹ்மதுல்லா)

 


Add new comment

Or log in with...