நாட்டின் பல இடங்களிலும் மழை! | தினகரன்


நாட்டின் பல இடங்களிலும் மழை!

அம்பாறை, மட். உள்ளிட்ட பல இடங்களில் மழை!-Weather Forecast-Rain

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடைப்பட்ட ஒருங்கிணைப்பு மண்டல வலயத்திற்கு (வட மற்றும் தென் அரைக் கோளங்களிலிருந்து வரும் காற்று சந்திக்கும் தாழமுக்க வலயத்திற்கு) அருகில், இலங்கையை அண்மித்த பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வானம் முகில் கூட்டங்களால் நிறைந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் வாய்ப்பு.
ஒரு சில பகுதிகளில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல் வட மேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்யலாம்.

நாளை:
மேல், தென், சப்ரகமுவா, மாகாணங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், ஒரு சில இடங்களில், விசேடமாக மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல், வட மேல் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிக கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவா, மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்ட நிலையை எதிர்பார்க்கலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம். மின்னல் தாக்கத்தின் மூலமான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...